Work

வளபர பதனததல பணபடட வழமயஙகள

Year: 2025
Type: article
Abstract: தமிழ் இலக்கிய உலகம் பரந்துபட்டது. சங்க காலம் தொடங்கி இன்று வரை எண்ணற்ற இலக்கியங்கள் தமிழ் மொழியில் தோன்றியுள்ளன. சங்க இலக்கியம், சங்கம் மருவிய கால இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலலக்கியம் என்பவற்றோடு நவீன கால இலக்கியங்கள் என அறியப்படுகின்ற கவிதை, சிறுகதை, புதினம் எனப்படும் நாவல், கட்டுரை, நாடகம் போன்ற வகைமையில் இன்றளவு எண்ணற்ற அளவில் காணக் கிடைக்கின்றன. அந்த வகையில் தமிழ் புதின உலகில் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட வேள்பாரி என்னும் புதினம் சங்க காலத்தை அடிப்படையாகக் கொண்டு அக்காலத்தில் வாழ்ந்த பழமையான குடிகளின் வாழ்வியல் முறைகளை எடுத்துக்காட்டும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிலையில் இலக்கியங்களின் ஆளுமைக்கும், வெற்றிக்கும், விழுமியங்களின் அசைவு நிலையே முக்கியப்பங்கு வகிக்கின்றது. நாடு, இனம், மதம், மொழி கடந்து திருக்குறளை உலகப் பொதுமறை என்று ஏற்கசெய்ததும் விழுமியங்களே. அவ்வகையில் வேள்பாரி புதினத்தில் பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்தப் பதிவுகளை சுருக்கமாக இவ்வாய்வுக்கட்டுரை விளக்க முற்படுகின்றது
Language: English
Open Access status: diamond
OpenAlex ID: W7117413952
FWCI:
Cites:
Cited by:
Related to: