வளபர நவல பலபபடததம பறவகளஶ வலஙகசர அறவத தறன
Year: 2025
Type: article
Abstract: வேள்பாரி நாவல் பறம்பு மலையின் சூழலியல் பறவை, விலங்குகளின் வாழ்க்கை முறைகள் மக்களுடனும் இயற்கையுடனும் உறுதியான நெருங்கிய தொடர்பை பெற்றிருக்கும் தன்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கதைத்தலைவன் பாரி போர் முறைகளுக்கு கூட காடு அறிதல் நிகழ்வின் மூலம் தான் இளமையில் கற்ற கல்வி முறை உத்திகளையும் பறம்பு மலையின் ஒவ்வொரு இடங்களின் நுணுக்கங்களையும் தெளிவாகப் பயன்படுத்தும் தன்மையை அழகாக நாவலின் வெளிப்படுத்துகின்றார் ஆசிரியர்.பறம்பு மலையின் இயற்கை அழகை விவரிக்கும் இடங்களில் பல அற்புதமான பறவைகளையும் விலங்குகளையும் படம்பிடித்துக்காட்டியுள்ளார். பறம்பு மலையின் சில இடங்களில் கற்பனைக்கும் கருத்துக்கும் விருந்து அளிக்கும் விதமாக பல கற்பனைப் பறவைகளையும் படைத்துக் காட்டி, படிப்பவர்களை மெ#சிலிர்க்க வைத்துள்ளார்.அப்படிப்பட்ட கற்பனை பறவைகளின் பெயர்களை அவர் நேரடியாக எங்கும் குறிப்பிடவில்லை.எனினும் வேள்பாரி நாவலில் இடம்பெற்றுள்ள வர்ணனை காட்சிகளிலும் கற்பனை காட்சிகளிலும் பறவைகள் விலங்குகளின் வண்ணங்களையும் உருவங்களையும் அவைகள் எழுப்பும் ஓசைகளையும் கற்பனையாக படிமத்தன்மையுடன் படைத்து கதை சொல்லும் உத்தி முறையாகக் நேர்த்தியாக கையாண்டுள்ளார். பறம்பு மலையின் காட்சிகள் யாவும் மலையின் வளமான இயற்கை சூழலையும் அவற்றின் வாழ்வியல் அமைப்பு முறைகளையும் விவரிப்பதாக உள்ளது.
Author: மா. மலர்செல்வி
Language: English
Subfield: Social Psychology
Field: Psychology
Domain: Social Sciences
Open Access status: green
OpenAlex ID: W7117572498
FWCI:
Cites:
Cited by:
Related to:
