Work

வளபர நவல கடடம நலவளகள

Year: 2025
Type: article
Abstract: இலக்கியங்கள் என்பவை தாம் வாழ்ந்த, வாழும் சமூகத்தின் வாழ்வியலைக் காட்டும் பிம்பங்களாக அமைகின்றன. ஆதலால் இலக்கியங்கள் காலத்தின் குரலாகவும் வரலாற்றின் களமாகவும் அமைந்து விடுகின்றன. இவ்விலக்கியங்கள் காலம் தோறும் தம்மைப் புதுப்பித்து புதிய புதிய இலக்கிய வடிவங்களாக இலக்கிய வரலாற்றில் இடம்பெறுகின்றன. நவீன இலக்கிய வரலாற்றில் புதின இலக்கியம் குறிப்பிட்ட இடத்தைப் பெறுகின்றன. புதின இலக்கியம் அல்லது நாவல் இலக்கியம் என்பது இருபதாம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்ற இலக்கிய வகையாக அமைகின்றது. பல்வேறு வகையான வளர்ச்சிகளைப் பெற்று புதின இலக்கியம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டது அவற்றில் வரலாற்று புதின வகையாக அமைந்தது வேள்பாரி நாவலாகும். புதினங்கள் சமகாலத்தின் வெளிப்பாடாக அமைகின்றது. எனினும் சங்க காலத்தின் சமூக வாழ்வியலை நிலவெளிகளோடு தொடர்புபடுத்தி, பல்வேறு புனைவுகள் இணைந்த புதினமாக வேள்பாரி நாவல் படைக்கப்பட்டுள்ளது. வேள்பாரி நாவல் காட்டும் நிலப்பரப்புகளையும் அவற்றின் தன்மைகளையும் எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது. இந்நாவலில் முக்கிய நிலப்பரப்பாக பறம்பு மலை சுட்டப்படுகிறது. அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதியும் காட்டுப்பகுதியும் மையமாகக் கொண்டு இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. இந்நாவலில் பல்வேறு வகையான நிலப்பரப்புகள் குறிப்பிடப்படுகின்றன. அத்தகைய நிலப்பரப்புகள் இயற்கை அழகு மிகுந்தும், செழுமையும் நிறைந்ததாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இவற்றை எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.
Language: English
Open Access status: green
OpenAlex ID: W7117582997
FWCI:
Cites:
Cited by:
Related to: